Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 5

Release Notes

Red Hat Enterprise Linux 5.11 க்கான வெளியீட்டுக் குறிப்புகள்

பதிப்பு 11

Red Hat வாடிக்கையாளர் உள்ளடக்க சேவைகள்


சட்டஅறிக்கை

Copyright © 2014 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
RaleighNC 27606-2072 USA
Phone: +1 919 754 3700
Phone: 888 733 4281
Fax: +1 919 754 3701

சுருக்கம்
Red Hat Enterprise Linux சிறு வெளியீடுகள் என்பவை, பல சிறூ சிறு மேம்படுத்தல்கள், பாதுகாப்பு மற்றும் வழு திருத்தங்களின் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux 5.11 வெளியீட்டுக் குறிப்புகளில் Red Hat Enterprise Linux 5 இயக்க முறைமையில் செய்யப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களும் அதனுடனான பயன்பாடுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறு வெளியீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தையும் பற்றிய குறிப்புகளை தொழில்நுட்பக் குறிப்புகளில் காணலாம்.

முன்னுரை
1. நிறுவலும் பூட்டிங்கும்
2. கெர்னல்
3. சாதன இயக்கிகள்
4. சந்தா நிர்வாகம்
5. மெய்நிகராக்கம்
6. தொழிற்துறைத் தரநிலைகளும் சான்றிதழும்
A. மறுபார்வை வரலாறு

முன்னுரை

வெளியீட்டுக் குறிப்பானது Red Hat Enterprise Linux 5.11 இல் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் பற்றிய மேலோட்டப் பார்வையை வழங்குகிறது. Red Hat Enterprise Linux இன் 5.11 புதுப்பில் செய்யப்பட்டுள்ள அனைத்து மாற்றங்கள் பற்றிய விரிவான ஆவணமாக்கத்திற்கு தொழில்நுட்பக் குறிப்புகளைக் காணவும்.

பாடம் 1. நிறுவலும் பூட்டிங்கும்

dmidecode SMBIOS ஐ ஆதரிக்கிறது

இப்போது dmidecode கருவியானது கணினி நிர்வாக BIOS (SMBIOS) பதிப்பு 2.8 ஐ ஆதரிக்கிறது, இதனால் பல வகையான வன்பொருளில் dmidecode ஆல் பில்டுகளை தானியக்கமாக்க முடிகிறது.

பாடம் 2. கெர்னல்

நேர முடிவு மதிப்பின் கட்டுப்பாடு

இப்போது Red Hat Enterprise Linux 5.11 kernel தொகுப்பில் I/O பிழை மீட்புக் கட்டளைகளுக்கான நேர முடிவு மதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான விருப்பங்கள் உள்ளன. முன்னர் இம்மதிப்பு 5 என அமைக்கப்பட்டிருந்தது, இதனால் 90 வினாடிகளில் செய்திகளுக்கான நேரம் முடிந்தது. மீண்டும் செய்யப்படும் முயற்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதனால் நேர முடிவு அடுக்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

MegaRAID SAS இயக்கி கொண்ட LSI 12 Gb/s அடாப்ட்டர்கள்

முன்னர் LSI MegaRAID SAS 9360/9380 12Gb/s கன்ட்ரோலர்கள் தொழில்நுட்ப மாதிரியாக ஆதரிக்கப்பட்டன, இப்போது Red Hat Enterprise Linux 5.11 இல் இவை முழுமையாக ஆதரிக்கப்படுகின்றன.

பாடம் 3. சாதன இயக்கிகள்

ProLiant சேவையகங்கள் ஆதரவு

இப்போது cciss இயக்கியானது சமீபத்திய HP SAS ஸ்மார்ட் அர்ரே கன்ட்ரோலர்களுடன் கூடிய ProLiant சேவையகங்களை ஆதரிக்கிறது.

பாடம் 4. சந்தா நிர்வாகம்

Red Hat ஆதரவுக் கருவியின் பிழைச் செய்தி வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது

இப்போது குறைந்த வட்டிடம் போன்ற ஏதேனும் காரணங்களால் Red Hat Support Tool கருவியால் வழுநீக்கச் சின்னங்களைப் பதிவிறக்க முடியாமல் போகும் சமயங்களில், கருவியானது இன்னும் மேம்பட்ட பிழைச் செய்திகளைக் காண்பிக்கிறது.

Subscription Manager

Red Hat Enterprise Linux 5.11 இல் உள்ள Subscription Manager பயன்பாடானது பயனர் இணைந்த உடனே redhat.repo கோப்பை உருவாக்குகிறது, yum கருவிக்காக காத்திருப்பதில்லை.
Subscription Manager பயன்பாட்டில் உள்ள சந்தா வகை புலம். இந்தப் புலமானது பயன்படுத்தப்படும் சந்தாவின் வகையைத் தெரிவிக்கிறது. இதை நீங்கள் கட்டளை வரி இடைமுகத்திலும் காணலாம், வரைவியல் இடைமுகத்திலும் காணலாம். சந்தாவின் வகையே சந்தாவின் செயல்குணங்களைத் தீர்மானிக்கிறது.
இப்போது நீங்கள் Subscription Manager பயன்பாட்டின் GUI இடைமுகத்திலேயே தொகுப்பதிவகங்களை செயல்படுத்துதல், முடக்குதல் போன்ற செயல்களைச் செய்து அவற்றை நிர்வகிக்க முடியும்.
கட்டளை வரி இடைமுகத்தில் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன:
  • Red Hat Enterprise Linux 5.11 இல், rhsm-debug system கருவியானது ஒரு tar கோப்பை உருவாக்குகிறது. இந்தக் கோப்பில் வழு அறிக்கைகளில் இணைக்கப்பட வேண்டிய கோப்புகள் உள்ளன.
  • subscription-manager list --available கட்டளையின் வெளியீட்டில் இரண்டு புலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. Provides என்னும் புலமானது கணினி தகுதி பெற்றுள்ள தயாரிப்புகளின் பெயர்களைக் காண்பிக்கிறது. Suggested என்னும் புலம் இணக்கத்தன்மைக்கு உதவுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இது GUI உடனான இணையும் தன்மையையும் வழங்குகிறது.
  • இப்போது subscription-manager list --available கட்டளையின் வெளியீட்டில் ஸ்டாக் கீப்பிங் யூனிட் (SKU) மதிப்பும் உள்ளது.

பாடம் 5. மெய்நிகராக்கம்

ESXi க்கான ஆதரவு

virt-who ஏஜன்ட் Red Hat Enterprise Linux 5.11 இல் இயங்கும் போது, இப்போது virt-who கட்டளையால் VMWare ESXi உடன் தகவல் பரிமாற்றம் செய்து மற்றும் Red Hat Subscription Manager க்கான வழங்கி மற்றும் விருந்தினர் மேப்பிங் தகவலைப் பெற முடியும்.

பாடம் 6. தொழிற்துறைத் தரநிலைகளும் சான்றிதழும்

OpenSCAP க்கான NIST சான்றிதழ்

OpenSCAP 1.0.8 ஆனது, பொதுவான பாதிப்பம்சங்கள் மற்றும் உட்படுதலம்சங்கள் (CVE) தெரிவுடன், அங்கீகரிக்கப்பட்ட அமைவாக்க ஸ்கேனர் பகுப்பில், தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான (NIST) பாதுகாப்பு உள்ளடக்கத் தானியக்க நெறிமுறை (SCAP) 1.2 ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. OpenSCAP ஆனது புதிய SCAP கருவிக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக SCAP தரநிலையின் ஒவ்வொரு கூறையும் பாகுபடுத்தி மதிப்பீடு செய்யும் ஒரு தரவகத்தை வழங்குகிறது. அத்துடன் OpenSCAP ஆனது உள்ளடக்கத்தை ஆவணங்களாக வடிவமைக்க அல்லது இந்த உள்ளடக்கத்தின் அடிப்படையில் கணினியை ஸ்கேன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பல பயன் கருவியையும் வழங்குகிறது.

மறுபார்வை வரலாறு

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 0.0-0.0Tue Aug 05 2014மிலன் நவ்ராட்டில்
Red Hat Enterprise Linux 5.11 வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.